Teri Mitti (Tamil Version) | Thai Manne Song Lyrics | Mannulage Song Lyrics


மண்ணுலகே
என் பிறப்பிடமே - இந்த
மண்ணுலகே
என் இருப்பிடமே.
மடிந்தாலும் அது மண்ணின் உள்ளே.
என் வாழ்க்கை என்பது மண்ணுலகே!

உணவென்பது அது
மண் வழியே.
என் உடல் என்பது
உணவின் வழியே.
உயிர் என்பது அது
உடல் வழியே எனில்
உயிர் எல்லாமே
மண்ணுயிரே!

தாய் மண்ணே -
உன் மடியில்
நான் உயிர் மலர்ந்தேன்.
மண்ணில் பிறந்தேன் நான்
என் ஜனனம்
உன் கருணை அல்லவா?

அனு அனுவாய்
உன்னில் கலந்தேன்!
நான் ஓர் உயிராய்,
உன்னில் இணைந்தேன் நான் ,
என் வாழ்வே,
உன் அருளால் அல்லவா?

மண்ணுடலே,
அதில் மண்னுயிரே,
மண்ணின் குடிலே,
அதில் மண் சுவரே.

மண் மறந்தால்,
ஒரு மண் குழியே!
மண் உணர்ந்தால்
அதுவே தாய் மடியே!

Comments

Post a Comment